மேலும் செய்திகள்
மாதர் தேசிய சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டம்
11-Mar-2025
மாதர் தேசிய சம்மேளனம்சார்பில் ஆர்ப்பாட்டம்கரூர்:இந்திய மாதர் தேசிய சம்மேளனம், கரூர் மாவட்ட கிளை சார்பில், டவுன் பஞ்., கவுன்சிலர் கலாராணி தலைமையில், புலியூர் நான்கு சாலையில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நட ந்தது.அதில், 100 நாள் வேலை திட்டத்தை, டவுன் பஞ்சாயத்துகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். பெண்கள் பணிபுரியும் இடங்கள், பள்ளி, கல்லுாரிகளில் புகார் பெட்டி வைக்க வேண்டும். புலியூர் டவுன் பஞ்.,சில் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். அனைத்து பெண்களுக்கும், மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன. மாநில துணைத்தலைவர் ராஜலட்சுமி, செயலாளர் லலிதா, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் வடிவேலன், நிர்வாகிகள் ராஜேஸ்வரி, சித்ரா உள்பட, பலர் பங்கேற்றனர்.
11-Mar-2025