மேலும் செய்திகள்
பாரதிய மஸ்துார் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
19-Mar-2025
பாரதிய மஸ்துார் சங்கம்சார்பில் ஆர்ப்பாட்டம்கரூர்:கரூர் மாவட்ட பாரதிய மஸ்துார் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், இ.பி.எஸ்., 98, திட்டத்தில் குறைந்தப்பட்ச ஓய்வூதியம், 5,000 ரூபாய் வழங்க வேண்டும். பொது சொத்துக்களை விற்பனை செய்து, பணமாக்குவதை நிறுத்த வேண்டும், காப்பீடு மற்றும் நிதித்துறையில் அன்னிய முதலீட்டை தடை செய்ய வேண்டும், அரசு திட்டங்களை செயல்படுத்தும், திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம், சமூக பாதுகாப்பை வழங்க வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர் நலன்களை பாதுகாக்க தேவையான நிதியுதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.மாவட்ட பொறுப்பாளர் பிரபு, நிர்வாகிகள் நந்தகோபால், பன்னீர் செல்வம், கருப்பையா, மாடசாமி உள்பட, பலர் பங்கேற்றனர்.
19-Mar-2025