பழைய ஜெயங்கொண்டத்தில்சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு
பழைய ஜெயங்கொண்டத்தில்சுகாதாரத்துறை சார்பில் ஆய்வுகிருஷ்ணராயபுரம்:பழையஜெயங்கொண்டம், டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் பொது சுகாதாரத்துறை சார்பில், கடைகளில் போதை பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு பணி நடந்தது.பழைய ஜெயங்கொண்டத்தில் உள்ள டீ கடைகள், மளிகை கடை, பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு பணி செய்தனர், சுகாதார ஆய்வாளர்கள் ராஜா, கிேஷார், அருள் ஆகியோர் கொண்ட குழுவினர் பணிகளில் ஈடுபட்டனர். மேலும், தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.