மேலும் செய்திகள்
கிராம உதவியாளர் உண்ணாவிரதம்
10-Apr-2025
கிராம உதவியாளர் சங்கம்உண்ணாவிரத போராட்டம்கரூர்:தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் அரசகுமார் தலைமையில், கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.அதில், அலுவலக உதவியாளருக்கு இணையாக, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், 15 ஆயிரத்து, 700 ரூபாய் வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராம நிர்வாக உதவியாளர்களின் கோரிக்கைகளை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. உண்ணாவிரத போராட்டத்தில், மாநில முன்னாள் துணைத்தலைவர்கள் கருணாகரன், மகாவிஷ்ணன், மாவட்ட செயலாளர் சுரேஷ் குமார், பொருளாளர் தமிழ்வாணன் உள்பட, பலர் பங்கேற்றனர்.
10-Apr-2025