மேலும் செய்திகள்
கிருஷ்ணராயபுரம் பகுதியில்சாரல் மழை பொழிவு
04-Apr-2025
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், பனை நுங்கு விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகாதானபுரம், திருக்காம்புலியூர், மாயனுார், சேங்கல், கொம்பாடிப்பட்டி, கருப்பத்துார் ஆகிய பகுதிகளில் பரவலாக பனை மரங்கள் உள்ளன. தற்போது நுங்கு சீசன் துவங்கியுள்ளது.இதனால் பனை மரத்தில் இருந்து நுங்குகள் பறிக்கப்பட்டு, மக்கள் கூடும் இடங்களில் வைத்து விற்கப்படுகிறது. கடுமையான வெயில் என்பதால், மக்கள் நுங்குகளை வாங்கி செல்கின்றனர். லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனுார் ஆகிய இடங்களில் விற்கப்படுகிறது. நுங்கு ஒன்று, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
04-Apr-2025