உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குட்டக்கடையில் நிழற்கூடம் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

குட்டக்கடையில் நிழற்கூடம் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர், கரூர் அருகே, புதிய நிழற்கூடத்தை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் - ஈரோடு சாலை புன்னம்சத்திரம் பஞ்., குட்டக்கடை பகுதி உள்ளது. இங்கு கோவில், ஓட்டல்கள் மற்றும் ஏராளமான குடிருப்புகள் உள்ளன.இதனால், பல ஆண்டுகளுக்கு முன், குட்டக்கடையில் பயணிகள் வசதிக்காக, நிழற்கூடம் அமைக்கப்பட்டு, விளக்குகளும் போடப்பட்டது. அதை, பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், கரூர் - ஈரோடு சாலையில் விரிவாக்க பணிகள், இரண்டு பக்கமும் நடந்தது. அப்போது, குட்டக்கடையில் இருந்த பயணிகள் நிழற்கூடம் அகற்றப்பட்டதாக தெரிகிறது.தற்போது, சாலை விரிவாக்க பணிகள் முடிந்த நிலையில், குட்டக்கடையில் புதிதாக பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. பொதுமக்கள், மாணவ, மாணவியர் கொளுத்தும் வெயிலில், பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, கரூர்-ஈரோடு சாலை, குட்டக் கடையில், பயணிகள் நிழற்கூடத்தை புதிதாக அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி