உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அருகே இரண்டு வீடுகளில் 20 பவுன் தங்க நகை திருட்டு

கரூர் அருகே இரண்டு வீடுகளில் 20 பவுன் தங்க நகை திருட்டு

கரூர்: கரூர் அருகே, அடுத்தடுத்து இரண்டு வீடுகளில், 20 பவுன் தங்க நகைகளை, மர்ம நபர்கள் திருடி சென்றனர்.கரூர் மாவட்டம், எஸ்.வெள்ளாப்பட்டி வடுகப்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ், 40. இவர் கடந்த, 8ல் வீட்டை பூட்டி விட்டு, உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பிறகு, அன்றிரவு வீட்டுக்கு சென்ற போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த, எட்டு பவுன் தங்க நகையை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.அதேபோல், கரூர் எஸ்.வெள்ளாளப்பட்டி வடுகப்பாளையம் பகு-தியை சேர்ந்தவர் ஹரிஹர சுதன், 46; இவர் கடந்த, 8 ல் தேனிக்கு சென்று விட்டு, இரவு வீடு திரும்பினார். அப்போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 12 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து, ஹரிஹர சுதன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ