மேலும் செய்திகள்
முள் செடிகள் அகற்றம்
13-Aug-2024
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் யூனியனுக்குட்பட்ட திருக்காம்புலியூர், சேங்கல், பஞ்சப்பட்டி, வல்லம், புதுப்பட்டி ஆகிய இடங்களில், விவசாயிகள் பரவலாக கொய்யா சாகுபடி செய்து வருகின்றனர். கொய்யாப்பழங்களை மொத்தமாக பறித்துக்கொண்டு வந்து, லாலாப்பேட்டை பஸ் ஸ்டாப் மற்றும் கடைவீதிகளில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.தற்போது, சீசன் குறைந்ததால் கொய்யா வரத்து சரிந்தது. இதனால் அதன் விலை உயர்ந்தது. கடந்த மாதம் கிலோ, 60 ரூபாய்க்கு விற்ற நிலையில், விநாயகர் சதுர்த்தியால் கொய்யா விலை கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கொய்யாவில் மருத்துவ குணம் நிறைந்திருப்பதால், மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
13-Aug-2024