சிறுமியை கொலை செய்த இன்ஜினியர் மீது குண்டாஸ்
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் சிறுமியை கொலை செய்த வழக்கில், சாப்ட்வேர் இன்ஜினியரை போலீசார் குண்டாசில் கைது செய்-தனர்.திருச்செங்கோட்டை சேர்ந்த சண்முகம் மகன் செந்தில்குமார், 44; சாப்ட்வேர் இன்ஜினியர். இவர், கடந்த ஜூலை, 27ல் வீட்-டிற்கு அருகில் வசிக்கும், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்த-ரவு கொடுத்துள்ளார். சிறுமி அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உற-வினர்கள் மற்றும் சிறுமியை கத்தியால் தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதில் காயமடைந்த சிறுமி, சேலத்தில் உள்ள தனியார் மருத்து-வமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த, 22ல் உயி-ரிழந்தார். இதையடுத்து சிறுமியை கொலை செய்த வழக்கில், செந்தில்குமாரை போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில்எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் பரிந்துரைப்படி, கலெக்டர் உமா செந்-தில்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் மத்திய சிறையில் உள்ள செந்தில்குமா-ரிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்த-ரவை வழங்கினர்.