பாலத்தில் தார்ச்சாலை பணி அதிகாரிகள் ஆய்வு
குளித்தலை: குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., பெருகமணி காவல்காரன்பட்டி, திருச்சி நெடுஞ்சாலையில், நங்கம் காட்டு-வாரி, பனையூர் காட்டு வாரியில், 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில், பாலம் கட்டும் பணி, 3.15 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து முடிந்தது. தற்போது, அதில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. குளித்தலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமரன் தலைமையில், இளநிலை பொறியாளர் சந்திரமோகன், அரசு ஒப்பந்ததாரர் பழனிசாமி, ஆர்.ஐ., சேகர் மற்றும் அலுவலர்கள் கொண்ட குழுவினர், அமைக்கப்பட்டு வரும் சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்-தனர். தொடர்ந்து, பணிகள் விரைவாக முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது என, தெரிவித்தனர்.