மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக கோலாகலம்
குளித்தலை: குளித்தலை அடுத்த, பாப்பக்காபட்டி கிராமத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் புனரமைக்கப்பட்டு, கடந்த, 11ல் யாக சாலைக்கு முகூர்த்த கால் நடும் விழா நடைபெற்றது. 21 காலை பக்தர்கள் கொண்டு வந்த தீர்த்தத்தை வைத்து சிவாச்சாரியார்கள் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் அஸ்-திர ஹோமம். வாஸ்து சாந்தி பூஜை நடத்தினர்.நேற்று காலை 8:00 மணியளவில் யாத்ரா தானம். கடம் புறப்-பாடு நிகழ்ச்சி நடந்தது. 9:00 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். இதையடுத்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின், மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆரா-தனை நடைபெற்றது.கோவில் தர்மகர்த்தாக்கள் டாக்டர் பார்த்திபன், பாப்பக்காபட்டி பஞ்., தலைவர் வக்கீல் இளங்குமரன் ஆகியோர் தலைமையில் கும்பாபி ேஷக விழா நடைபெற்றது. கோவில் செயல் அலு-வலர் சந்திரசேகரன், பணியாளர்கள், கோவிலுக்கு பாத்தியப்பட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரி-சனம் செய்தனர். கோவில் விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் மேற்பார்வையில், இன்ஸ்-பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், மற்றும் போலீசார், ஊர்காவல் படை-யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.