குளித்தலை கோட்டத்தில்ஏ.ஐ.சி.சி.டி.யு., கூட்டம்
குளித்தலை கோட்டத்தில்ஏ.ஐ.சி.சி.டி.யு., கூட்டம்குளித்தலை:குளித்தலை அடுத்த அய்யர்மலை தெப்பக்குளம், வடக்குப்படி அருகே உள்ள மண்டபத்தில், -தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொது தொழிலாளர் சங்கத்தின் (ஏ.ஐ.சி.சி.டி.யு.,), குளித்தலை கோட்டம் சார்பில் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமை வகித்தார். கிளை செயலாளர் ஜெய்பாபுஜி, கிளை பொருளாளர் முகமது ரபிக், உறுப்பினர்கள் பிரபுதேவான், மைக்கேல், முத்துசாமி, காந்தி, சிவக்குமார், கிருஷ்ணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், உறுப்பினர்கள் சேர்ப்பது, கோட்ட பேரவை நடத்துவது, நிதி திரட்டுவது, விடுபட்ட கேங்மேன் பணிக்கு ஆட்களை அமர்த்துவது, செந்த ஊருக்கு இடமாறுதல் தருவது, களப்பணியாளர்கள் பணி பாதுகாப்பு, மின்வாரியத்தில் அவுட்சோர்சிங் முறையை தடுப்பது, பணியாளர்கள் பணிச்சுமையை குறைப்பது, மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்புவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.