மேலும் செய்திகள்
கோவிலுக்கு சென்றபள்ளி மாணவி மாயம்
27-Mar-2025
மும்மொழி கொள்கைக்குஆதரவாக கையொப்பம்குளித்தலை: குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., நச்சலுாரில் நேற்று முன்தினம் மாலை, ஒன்றிய பா.ஜ., சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதவாக, பொது மக்களிடம் கையொப்பம் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய தலைவர் பொன்ரஞ்சித் தலைமை வகித்தார். ஒன்றிய செயலர்கள் பொறியாளர் மனோஜ், ஹரிராம் குமார், பொறுப்பாளர் விநாயகமூர்த்தி, நகர தலைவர் ரம்யா கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாநில மகளிரணி துணைத் தலைவர் மீனாவினோத் ஆகியோர் பங்கேற்று, மத்திய அரசின் சாதனைகள் குறித்து பேசினர்.தொடர்ந்து ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த பொது மக்களின் குழந்தைகள், மும்மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை எடுத்து விளக்கினர். தோகைமலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் ஒன்றிய, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
27-Mar-2025