மேலும் செய்திகள்
குளிர்வித்த சாரல் மழையால் மகிழ்ச்சி
13-Mar-2025
அரவக்குறிச்சியில் கனமழைவிவசாயிகள் மகிழ்ச்சிஅரவக்குறிச்சி:அரவக்குறிச்சியில், நேற்று அதிகாலை பெய்த பலத்த மழையால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதமாக, அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில், ஏப்ரல் மாத துவக்க நாளான, செவ்வாய்க்கிழமை காலை திடீரென பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல நேற்று அதிகாலை 2:00 மணிக்கு துவங்கிய மழை கன மழையாக மாறி, 6:00 மணி வரை தொடர்ந்து பெய்தது. இதனால் சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது.தொடர்ந்து நான்கு மணி நேரம் பெய்த கனமழையால், அரவக்குறிச்சி முழுதும் குளிர்ந்த சூழ்நிலை உண்டானது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கோடை வெப்பத்தை தணிக்க, நான்கு மணி நேரம் பெய்த கன மழையால், அரவக்குறிச்சி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
13-Mar-2025