மேலும் செய்திகள்
சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
02-May-2026
கரூர்:: கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் உலக மக்கள் நலன் வேண்டியும், மண்ணில் உயிர்கள் செழித்து வாழ மழை வேண்டியும் மஹா சண்டி யாகம் நடந்தது.இதை முன்னிட்டு, அக்னி குண்டம் அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி ஹோமம் செய்தனர். தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
02-May-2026