உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுபயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுபயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுபயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம்கரூர்:கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு பயிற்சி வகுப்புகள் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், 70 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு வரும் ஜூன், 15ல் நடக்கிறது. இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. சிறப்பான பயிற்றுனர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. காற்றோட்டமான அறை, குடிநீர் வசதி, ஸ்மார்ட் போர்டு, அனைத்து போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நுாலக வசதி, பொது அறிவுக்கான மாத இதழ்கள், பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறு தேர்வுகள், மென்பாட குறிப்புகள் எடுத்துக் கொள்ள இணையதளத்துடன் கூடிய கணினி வசதி என பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.பயிற்சி மையத்தில் கடந்தாண்டு நடத்தப்பட்ட, டி.என்.பி.எஸ்.சி., குருப் 4 தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வருவாய் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, மருத்துவ துறை போன்ற பல்வேறு அரசு துறைகளில் பணிநியமன ஆணை பெற்றுள்ளனர். மாதிரி தேர்வுகள் ஒவ்வொரு புதன்கிழமையும், வாரத்தேர்வுகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடக்கிறது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், உடனடியாக கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை