ரூ.1.40 கோடியில் வளர்ச்சிப்பணிவிரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
ரூ.1.40 கோடியில் வளர்ச்சிப்பணிவிரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவுகிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் யூனியன் பஞ்சாயத்துக்குட்பட்ட சிவாயம், பாப்பகாப்பட்டி, வயலுார், வீரியபாளையம், பஞ்சாயத்துகளில் சட்டசபை தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், குப்பாச்சிப்பட்டியில், 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் கூடத்தையும், பாப்பகாப்பட்டி பஞ்சாயத்தில், ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு திட்டத்தில், பாப்பகாப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை, 50 லட்சம் ரூபாயில், கணினி அறை கட்டடம் கட்டும் பணிகளை, மாவட்ட கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். உதவி செயற்பொறியாளர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ், முருகேசன், யூனியன் பொறியாளர்கள் ஜெகதீசன், சரவணன், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.