பள்ளப்பட்டி உரூஸ் விழாரூ.15.55 லட்சத்துக்கு சுங்க ஏலம்
பள்ளப்பட்டி உரூஸ் விழாரூ.15.55 லட்சத்துக்கு சுங்க ஏலம்அரவக்குறிச்சி:பள்ளப்பட்டியில் நடைபெறும், 265ம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் திருவிழாவை முன்னிட்டு, கடைகளுக்கான சுங்கம் வசூலிக்கும் ஏலம், 15.55 லட்சத்திற்கு போனதாக கமிஷனர் ஆர்த்தி தெரிவித்தார்.அரவக்குறிச்சி அருகே உள்ள, பள்ளப்பட்டியில் புகழ்பெற்ற சந்தனக்கூடு உரூஸ் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இன்று முதல், 15ம் தேதி வரை நடைபெறும் சந்தனக்கூடு உரூஸ் திருவிழாவை முன்னிட்டு, விழா நடைபெறும் இடங்களின் சுங்கம் வசூலிக்கும் உரிமை ஏலம், பள்ளப்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கடந்த, 7ம் தேதி நகராட்சி கமிஷனர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.இதில் பள்ளப்பட்டியை சேர்ந்த பலர், ரூ.1 லட்சம் முன்வைப்பு தொகையை ரொக்கமாக செலுத்தி ஏலம் கோரினர். முடிவில் பள்ளப்பட்டியை சேர்ந்த அப்பாஸ் அலி என்பவர், 15 லட்சத்து, 55 ஆயிரம் தொகைக்கு சுங்க ஏலத்தை எடுத்தார். இதற்கான தொகையை, பள்ளப்பட்டி நகராட்சி அலுவலகத்தில் அப்பாஸ் அலி செலுத்தினார்.