உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்ரூ.24 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்ரூ.24 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்ரூ.24 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்கரூர்,:சாலைபுதுார், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 24 லட்சம் ரூபாய்க்கு நிலக்கடலை ஏலம் போனது.கரூர் மாவட்டத்தில், சாலைப்புதுாரில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நிலக்கடலை ஏலம் நடத்தப்படுகிறது, அங்கு கரூர் மற்றும் க.பரமத்தி பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த நிலக்கடலைகளை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இதன்படி, நேற்று நிலக்கடலை ஏலம் நடந்தது.சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 1,014 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 60.16 ரூபாய், அதிகபட்சமாக, 74.50 ரூபாய், சராசரியாக, 71.50 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 34 ஆயிரத்து, 353 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 24 லட்சத்து, 2,296 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை