உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாவட்டத்தில் 344 இடங்களில் முதல்வர்பிறந்த நாள் விழா: மின்துறை அமைச்சர்

மாவட்டத்தில் 344 இடங்களில் முதல்வர்பிறந்த நாள் விழா: மின்துறை அமைச்சர்

மாவட்டத்தில் 344 இடங்களில் முதல்வர்பிறந்த நாள் விழா: மின்துறை அமைச்சர்கரூர் கரூர் மாவட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, 344 இடங்களில் இன்று முதல் வரும், 9 வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, மின்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட தி.மு.க., செயலாளருமான செந்தில் பாலாஜி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலினின், 72 வது பிறந்த நாள் விழா இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று முதல், வரும், 9 வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, கரூர் மாவட்ட தி.மு.க., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இன்று, 293 இடங்களில் அன்னதானம், இனிப்பு வழங்குதல், கொடியேற்றுதல் உள்ளிட்ட, நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து நாளை முதல் வரும், 9 வரை விளையாட்டு போட்டி, மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகம் வழங்குதல், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கரூர் மாவட்டம் முழுவதும், 344 இடங்களில் நடக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !