சேவல் சண்டை6 பேருக்கு காப்பு
சேவல் சண்டை6 பேருக்கு காப்புஅரவக்குறிச்சி, : அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சேவல் சண்டை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அரவக்குறிச்சி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, வெள்ளக்கல்பட்டி ஓடை பகுதியில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்திய ராமமூர்த்தி, அழகேசன், சசிகுமார், மாரிசாமி, கிருஷ்ணசாமி, மகேஷ் ஆகிய, 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 2 சேவல், 1,050 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.