மேலும் செய்திகள்
பெண்ணை தாக்கிய மூவருக்கு வலை
21-Aug-2024
குளித்தலை, செப். 8-குளித்தலை அடுத்த நெய்தலுார் பஞ்., நெய்தலுார் காலனியை சேர்ந்தவர் கோகுல், 24; இவர், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி கட்டிக்கொண்டிருந்தார். அப்போது, தெற்குபட்டியை சேர்ந்த மணிவேல், சேப்பளாபட்டியை சேர்ந்த லட்சுமணன், பிரசாந்த், ஸ்டீபன்ராஜ் ஆகியோர், எப்படி நீ சிலை வைக்கலாம் என கேட்டு, தகாத வார்த்தையால் பேசி, கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கோகுல் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார், 4 பேர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.
21-Aug-2024