பவுர்ணமி கிரிவலம் சிறப்பு பஸ் வசதி
பவுர்ணமி கிரிவலம்சிறப்பு பஸ் வசதி குளித்தலை, செப். 18-குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில், பவுர்ணமியையொட்டி கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், பொது மக்கள், பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் பாதையில் மலையை சுற்றி நடந்து சென்றனர். அதிகளவு பக்தர்கள் வருகை புரிந்ததால், குளித்தலை அரசு போக்குவரத்து பணிமனை சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று புரட்டாசி மாதம் முதல் தேதியும், பவுர்ணமியும், செவ்வாய் கிழமையும் வந்ததால், பக்தர்கள் முருகன் கோவில், பெருமாள் கோவில், சிவன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.