உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வர்த்தக சங்கம், பொது மக்கள் சார்பில் கடையடைப்பு, முற்றுகை போராட்டம்

வர்த்தக சங்கம், பொது மக்கள் சார்பில் கடையடைப்பு, முற்றுகை போராட்டம்

வர்த்தக சங்கம், பொது மக்கள் சார்பில் கடையடைப்பு, முற்றுகை போராட்டம்குளித்தலை, செப். 17-குளித்தலை அடுத்த, காணியாளம்பட்டியில் கடந்த, 8 இரவு ஒரு தரப்பினர் பொது மக்களை தாக்கியும், பேக்கரி கடையையும் சேதப்படுத்தினர். அவர்களை கைது செய்ய வலியுறுத்தி, கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் செய்து, கோரிக்கை மனுவை தாசில்தாரிடம் கொடுத்தனர்.குளித்தலை அடுத்த, காணியாளம்பட்டி பகுதியில் பேக்கரி கடையை கடந்த, 8 இரவு வேப்பங்குடியை சேர்ந்த இளைஞர்கள் மது போதையில் வந்து, கடையில் இருந்த ஒரு தரப்பினரை தாக்கி, தின்பண்டங்களை வாங்கி பணம் தராமல் வாக்குவாதம் செய்து கடையை அடித்து சேதப்படுத்தினர். மேலும், பாப்பணம்பட்டியை சேர்ந்த மூன்று இளைஞர்களை தாக்கினர். இதுகுறித்து, 10க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, வர்த்தக சங்கம் மற்றும் அப்பகுதி பொது மக்கள் சார்பில் காணியாளம்பட்டி, உடையாபட்டி, தரகம்பட்டி, சுண்டுக்குளிப்பட்டி, மையிலம்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த சம்பவத்தை கண்டித்து, 500க்கும் மேற்ப்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.உடனடியாக தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும், ஒருதலைபட்சமாக செயல்படும் போலீசாரை கண்டித்தும், கடவூர் தாலுகா அலுவலகம் முன் முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், தாசில்தார் இளம்பருதியிடம் மனு கொடுத்தனர். ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். குளித்தலை டி.எஸ்.பி.,செந்தில்குமார் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ