உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாற்றுத்திறனாளிகள்குழந்தைகளுக்கான சுற்றுலா

மாற்றுத்திறனாளிகள்குழந்தைகளுக்கான சுற்றுலா

மாற்றுத்திறனாளிகள்குழந்தைகளுக்கான சுற்றுலாகரூர்:கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கான சுற்றுலா பஸ்சை, கலெக்டர் தங்கவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.அப்போது, அவர் கூறியதாவது:தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சி கழகத்துடன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், காது கேளாத, வாய் பேசாத மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். கரூர், புனித அந்தோணியார் மனவளர்ச்சி குன்றியோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் மற்றும் மதர் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதவர்களுக்கான பயிற்சி மையங்களில் இருந்து சிறப்பாசிரியர்கள், பாதுகாவலர்கள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் என மொத்தம், 45 பேர் திருச்சியில் உள்ள பறவைகள் பூங்காவிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.இவ்வாறு கூறினார்.நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ், மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர் அமீம் அன்சாரி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ