மேலும் செய்திகள்
நாமகிரிப்பேட்டையில் பலத்த காற்றுடன் கனமழை
04-May-2026
அரவக்குறிச்சியில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:00 மணியிலிருந்து அதிகாலை 6:00 மணி வரை கனமழை பெய்தது. மழையால் உஷ்ணம் குறைந்தது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.விவசாயிகள் மகிழ்ச்சிகிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, வயலுார், சிவாயம், பாப்பகாப்பட்டி, கருப்பத்துார், வேங்காம்பட்டி, மேட்டுப்பட்டி, வரகூர், சேங்கல், மாயனுார், மணவாசி, பாலராஜபுரம், கட்டளை, ரெங்கநாதபுரம், கொம்பாடிப்பட்டி, வல்லம், கொசூர், மைலம்பட்டி, கடவூர், பழைய ஜெயங்கொண்டம் கிராமங்களில் மழை கொட்டியது. இந்த மழையால் மரவள்ளிக்கிழங்கு, சோளம், வெற்றிலை, நெல் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
04-May-2026