உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பெரியகாண்டியம்மன் கோவிலில்48வது நாள் மண்டல அபிேஷகம்

பெரியகாண்டியம்மன் கோவிலில்48வது நாள் மண்டல அபிேஷகம்

பெரியகாண்டியம்மன் கோவிலில்48வது நாள் மண்டல அபிேஷகம்குளித்தலை:குளித்தலை அடுத்த, வரவனை பஞ்.. வேப்பங்குடியில் பெரியகாண்டியம்மன், ஏழு கன்னிமார்கள், மகாமுனி, கருப்பசாமி, பொன்னாண்டவர், சங்காண்டவர், வீரபாகு சாம்புகன், அருமைதங்கம் ஈசன் அருள்பெற்ற ஜோதி ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனியாக கோவில்கள் உள்ளன.கடந்த பிப்., 4ல், கும்பாபி ேஷக விழா நடந்தது. அன்று முதல், 47 நாட்களுக்கு இப்பகுதி பங்காளிகள், குடிபாட்டுக்காரர்கள், பொதுமக்கள் விரதம் இருந்து மண்டல அபிேஷகம் செய்து வழிபட்டனர். நேற்று, 48வது நாள் மகா மண்டல அபி ேஷகம் நடைபெற்றது.கோவில் முன்பாக யாகம் நடத்தப்பட்டது. பின்னர் பெரியகாண்டியம்மன், ஏழு கன்னிமார்கள், மகாமுனி, கருப்பசாமி, பொன்னாண்டவர், சங்காண்டவர், வீரபாகு சாம்புகன், அருமைதங்கம் ஈசன் அருள்பெற்ற ஜோதி ஆகிய சுவாமிகளுக்கு தேன், நெய், பால், புனித நீர், திருமஞ்சனம், இளநீர், திருநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்பட, 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் செய்தனர். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை