உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குகை வழிப்பாதை பணி மந்தம் அறிவித்த போராட்டம் ஒத்திவைப்பு

குகை வழிப்பாதை பணி மந்தம் அறிவித்த போராட்டம் ஒத்திவைப்பு

குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மருதுார் - மேட்டுமருதுார் சாலையில், மருதுார் ரயில்வே குகை வழிப்பாதை பணிக்காக, கடந்த ஜூன், 20 முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மூன்று மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்திருந்தது. தொடர்ந்து, ஜூலை, 17ல் பாலம் அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து எந்த பணியும் நடக்காமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.இந்நிலையில், அப்பகுதி மக்கள், பட்டவர்த்தி குகை வழிப்பாதை வழியாக இருசக்கர வாகனம் வந்துசெல்ல பாதை அமைத்து தர வேண்டும் என, சேலம் ரயில்வே கோட்ட தலைமை பொறியாளர் மற்றும் திருச்சி, கரூர் ரயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், ரயில்வே நிர்வாகம், மாற்று பாதை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை.இதனால், இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக பொதுமக்கள் அறிவித்திருந்தனர். ஆனால், ஒரு மாதத்தில் பணிகளை முடித்து, பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என, ரயில்வே நிர்வாகம் சார்பில் உறுதி அளித்ததால், இன்று நடைபெற இருந்த ரயில் மறியல் போராட்டம், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி