உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ௶அ.தி.மு.க., 53வது ஆண்டு துவக்க விழா கரூரில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

௶அ.தி.மு.க., 53வது ஆண்டு துவக்க விழா கரூரில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

௶அ.தி.மு.க., 53வது ஆண்டு துவக்க விழாகரூரில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்கரூர், அக். 18-அ.தி.மு.க., 53 வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்ட நிகழ்ச்சி கரூரில் நடந்தது. இதில், கரூர் லைட்ஹவுஸ் கார்னரில், முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமையில் மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினர். பின் தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சின்னசாமி, இணை செயலாளர் மல்லிகா சுப்பராயன், மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், மாவட்ட துணை செயலாளர் தங்கராஜ், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சிவசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் கமலகண்ணன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.* கரூர் மாநகராட்சி வெங்க மேட்டில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., சிலைகளுக்கு மாவட்ட அவைத்தலைவர் திருவிக தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை