உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உலக புகையிலை ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்பு

உலக புகையிலை ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்பு

குளித்தலை: குளித்தலை பஸ் ஸ்டாண்டில் நேற்று காலை, உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி பட விளக்க கண்காட்சி நடந்தது.பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் சார்பில், உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி நடந்த பட விளக்கம் கண்காட்சியை, குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் திறந்து வைத்து, பொது மக்கள் மத்தியில் உறுதி மொழி ஏற்றார்.பிரம்ம குமாரிகள் சங்கம் சகோதரி பரமேஸ்வரி, சிவனேஸ்வரி மற்றும் சகோதரர்கள் மோகன் தாஸ், நாராயணன், ராஜசேகரன், சரவணகுமார் ஆகியோர் பேசுகையில்,' சிகரெட், பீடி, புகையிலை மற்றும் மது போதை பழக்கத்தால், அடிமையாகி அறிவிழந்து, தவறான செயல்களை செய்து, வாழ்வை அவலமாக்கி விடுகிறோம். அளவான உணவு, சத்தான ஆகாரம் மற்றும் நல்ல பழக்க வழக்கங்கள் இல்லை என்றாலும் உடல் நலிந்து வாழ்வு பாழ்படும்,' என விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். பொது மக்களுக்கு துண்டு நோட்டீஸ்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை