உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சி கல்லுாரி மாணவர் தமிழக கைப்பந்து அணிக்கு தேர்வு

அரவக்குறிச்சி கல்லுாரி மாணவர் தமிழக கைப்பந்து அணிக்கு தேர்வு

அரவக்குறிச்சி: பீகாரில் நடைபெற உள்ள, கைப்பந்து போட்டிக்கு அரவக்குறிச்சி அரசு கல்லுாரி மாணவர் தமிழக அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம், நெரூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ், 18. இவர், அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.ஏ., தமிழ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வரும், 29ம் தேதி பீகாரில் நடைபெற உள்ள கைப்பந்து போட்டியில், தமிழக அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை, அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி