உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல்: இருவர் கைது

பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல்: இருவர் கைது

கரூர் : கரூரில், பெட்ரோல் பங்க்கில் ஊழியர்களை அடித்த, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், எருமைகாரன்புதுார் பகுதியை சேர்ந்த வேலுசாமி, 53, கரூரை சேர்ந்த, 17 வயது சிறுவன் உள்ளிட்ட சிலர் கடந்த, 13 அதிகாலை, கோவை சாலையில் உள்ள ரஞ்சித் ஏஜென்சி பெட்ரோல் பங்க்கில், டூவீலரில் பெட்ரோல் போட சென்றனர். அப்போது, பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும், வேலுச்சாமிக்கும் இடையே, பெட்ரோல் அளவு தொடர்பாக தகராறு ஏற்பட்டது. பிறகு, வேலுசாமி தரப்பினருக்கும், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.அதில், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பாரதி, 29, முகமது முஜாத், 39, ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து, பெட்ரோல் பங்க் மேலாளர் சீனிவாசன், 43,கொடுத்த புகார்படி, வேலுசாமி, 17 வயது சிறுவன் ஆகியோரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை