மேலும் செய்திகள்
உருண்டை வெல்லம் விலை உயர்வு
25-Aug-2024
கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, உருண்டை வெல்லத்துக்கு, விலை குறைந்த நிலையில், அச்சு வெல்லத்துக்கு விலை அதிகரித்துள்ளது.கரூர் மாவட்டத்தில், வேலாயுதம்பாளையம், நொய்யல், மரவாப்பாளையம், சேமங்கி, முத்தனுார், கவுண்டன்புதுார், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், ஓலப்பாளையம், நடையனுார், புகளூர், தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில், குண்டு வெல்லம், அச்சு வெல்லம் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.கடந்த வாரம், 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம், 1,460 ரூபாய்க்கு விற்றது. நடப்பு வாரம், 1,400 ரூபாயாக விலை குறைந்தது. அதேபோல், 30 கிலோ கொண்ட அச்சு வெல்லம் கடந்த வாரம், 1,320 ரூபாய்க்கு விற்றது. நடப்பு வாரம், 1,460 ரூபாயாக அதிகரித்தது.
25-Aug-2024