மேலும் செய்திகள்
வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு
30-Aug-2024
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், ஓட்டுச்சாவடி மாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது: மாவட்டத்தில் ஒரு ஓட்டுச்சாவடியில், 1,500-க்கும் அதிகமாக வாக்காளர்கள் இருப்பின் அதனை இரண்டாக பிரித்து புதிய சாவடியை ஏற்படுத்துதல், தேவைப்படின் ஓட்டுச்சாவடிகளில் அமைவிட மாற்றம் செய்தல், கட்டட மாற்றம் செய்தல் ஆகிய மறுவரையறை செய்தல் பணிகள் நடக்கிறது. மறுவரையறை தொடர்பாக ஆட்சேபனை இருப்பின், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு பேசினார்.கூட்டத்தில், நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா, மாநகராட்சி கமிஷனர் சுதா, ஆர்.டி.ஓ., முகமது பைசல் (கரூர்), தனலெட்சுமி (குளித்தலை) உள்பட பலர் பங்கேற்றனர்.
30-Aug-2024