12.88 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,080.66 கோடி பயிர் கடன்
கரூர்: ''கரூர் மாவட்டத்தில், 12.88 லட்சம் விவசாயிகளுக்கு, 1,080.66 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.கரூர் அருகில், பஞ்சமாதேவி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது: கரூர் மாவட்டத்தில், 2,644 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 12 லட்சத்து, 88 ஆயிரத்து, 53 விவசாயிகளுக்கு, 1,080.66 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில், இதுவரை, 133 கிராம பஞ்சாயத்துகளில், 174.74 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்ட, விவசாயிகளுக்கு தரிசு நிலத்தை சாகுபடிக்கு உகந்ததாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயிர் கடனை, உரிய காலத்துக்குள் திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு, வட்டியில்லா பயிர் கடன்களை கூட்டுறவு சங்கங்கள் வழங்கி வருகிறது. இவ்வாறு பேசினார்.