கரூரில் தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டம்
கரூர்: கரூரில் உள்ள மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், நேற்று செயற்குழு கூட்டம் நடந்தது.மாவட்ட அவை தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும், மின்துறை அமைச்சருமான செந்தில்பா-லாஜி பேசினார். முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை, மாவட்ட, மாநகர, நகர, வட்டம், கிளை என, 72 இடங்களில் தொடர் நிகழ்ச்சிகளாக நடத்த வேண்டும். மேலும் அன்னதானம், மாணவ, மாணவியருக்கு உதவிகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். தமிழகத்தில் மூன்று மொழி கொள்கை ஏற்க முடியாது. மக்களின் உணர்வுகளை மதிக்காத மத்-திய அரசை கண்டிப்பது, இதற்கு எதிராக நாளை (25ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை-வேற்றப்பட்டன.கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாம-சுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தரணி சர-வணன், கரூர் மாநகர செயலாளர் கனகராஜ், மாநகர பகுதி செய-லாளர்கள் கணேசன், ராஜா, சுப்பிரமணியன், மாநகர பகுதி பொறுப்பாளர் ஜோதிபாசு உள்பட பலர் பங்கேற்றனர்.