பசுமையான வளர்ச்சியில் துவரை செடிகள்
கிருஷ்ணராயபுரம்: பழையஜெயங்கொண்டம் பகுதியில், துவரை செடிகள் செழிப்-பாக பசுமையாக வளர்ந்து வருகிறது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டம், லட்சும-ணம்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதியில் மானாவாரி விவசாய விளை நிலங்களில் துவரை செடிகள் சாகுபடி செய்து வருகின்-றனர். கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் செடிகள் வளர்ந்து வருகிறது.மேலும் விவசாய தொழிலாளர்களை கொண்டு, துவரை செடிகள் நடுவில் வளர்ந்து வரும் களைகள் அகற்றப்பட்டது. தற்-போது செடிகள் பசுமையாக வளர்ந்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், செடிகள் செழிப்பாக வளர்ந்து அதிக மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் கூறினர்.