| ADDED : ஜூலை 29, 2024 01:34 AM
கரூர்: 'காவிரியாற்றில் வரும் உபரிநீரை ஏரிகளில் சேமிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம் தெரி-வித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து, தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், மேட்டூர் அணை இன்னும் இரண்டு நாட்களில், 120 அடியை தொட்டு விடும். ஆடி, 18ல், வெள்ளம் வரலாம். ஆனால், டெல்டாவில் காவிரி பாசன நிலங்கள் தயார் நிலையில் இல்லை. இதனால், காவிரியாற்றில் வரும் உபரி நீரை, திட்டமிட்டு ஏரிகளில் சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சொட்டு நீர் கூட கடலுக்கு செல்ல கூடாது. தண்ணீரை தமிழ்நாடு சரியாக பயன்படுத்த-வில்லை.இதனால், மேகதாது கட்டுபாட்டால், சீரான தண்ணீர் தமிழ்நாட்-டுக்கு கிடைக்கும் என, கர்நாடகா அரசு ஊளையிட வழிவகை செய்யக்கூடாது. நாள்தோறும் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வந்-தாலும், அதை சேமிக்க தமிழக அரசு தவறும்பட்சத்தில், டெல்டா விவசாயம் பாலைவனமாகும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.