உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டி.என்.பி.எல்., ஆலை சார்பில் நடமாடும் இலவச மருத்துவம்

டி.என்.பி.எல்., ஆலை சார்பில் நடமாடும் இலவச மருத்துவம்

கரூர்: புகழூர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில், சமுதாய நலப்பணி திட்டத்தின் கீழ், நடமாடும் இலவச மருத்-துவ முகாம் தொடக்க விழா நடந்தது.நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சந்தீப் சக்சேனா கொடி-யசைத்து தொடங்கி வைத்தார்.ஆலையை சுற்றியுள்ள புகழூர் நக-ராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., வேட்டமங்கலம், புன்னம், கோம்புப்பாளையம், நஞ்சைப்புகழூர், திருக்காடுதுறை ஆகிய பஞ்., பகுதிகளில் உள்ள, 70 கிராமங்களில் நடமாடும் இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. நிகழ்ச்சியில், காகித ஆலையின் முதன்மை பொது மேலாளர் (இயக்கம்) நாகராஜன், பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன், மருத்துவ அலு-வலர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை