கால்நடை துறை சார்பில் மருந்தக ஊர்தி துவக்கம்
கால்நடை துறை சார்பில்மருந்தக ஊர்தி துவக்கம்கிருஷ்ணராயபுரம், செப். 6-கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம் பகுதியில், கால்நடை துறை சார்பில் நடமாடும் மருந்தக ஊர்தியை எம்.எல்.ஏ., மாணிக்கம் துவக்கி வைத்தார்.கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, வீரியபாளையம் பஞ்சாயத்து கிராமத்தில் கால்நடைத்துறை சார்பில், நடமாடும் மருந்தக ஊர்தியை குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் துவக்கி வைத்தார். கிராமத்தில் வளர்க்கும் கால்நடைகளுக்கு தேவையான, மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக கால்நடை மருந்தக ஊர்தி சேவை பயன்படுகிறது. இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிரவன், கால்நடை உதவி மருத்துவ அலுவலர் கோகுல், நடமாடும் கால்நடை மருத்துவ அலுவலர் பாஸ்கர் மற்றும் கால்நடை மருத்துவத்துறை பணியாளர்கள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.