உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / . கரூரில் எல்.ஐ.சி., முகவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

. கரூரில் எல்.ஐ.சி., முகவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

.கரூரில் எல்.ஐ.சி., முகவர்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்கரூர், அக். 29-கரூர் எல்.ஐ.சி., முகவர் சங்கம் கிளை-1 சார்பில், தென் மண்டல துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில், எல்.ஐ.சி., அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.பாலிசிதாரர்களுக்கு போனசை உயர்த்தி கொடுக்க வேண்டும். எல்.ஐ.சி., பாலிசிக்கான ஜி.எஸ்.டி.,யை நீக்க வேண்டும். முகவர்களின் கமிஷனை குறைக்க கூடாது. முகவர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கிளை செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் ராமச்சந்திரன், நிர்வாகி கணிகாசலம் உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை