காகித ஆலையில் வருமான வரித்துறை சார்பில் கூட்டம்
கரூர், ஆக. 29-கரூர் வருமான வரித்துறை சார்பில், புகழூர் காகித ஆலை (டி.என்.பி.எல்.,) கூட்ட அரங்கில், வரி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.அதில், வருமான வரித்துறை அலுவலர் சேகர், வீடியோகான்பரன்ஸ் மூலம், வருமான வரித் துறையின் நடைமுறைகள், வரி செலுத்துவதன் நோக்கம், வரி செலுத்துவோரின் கடமைகள், போலியான ஆவணங்கள் மூலம், வங்கி கணக்கு தாக்கல் செய்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பேசினார்.கூட்டத்தில், காகித ஆலை பொதுமேலாளர் கலைசெல்வன், துணை பொது மேலாளர் சுபாஷிஸ், வருமான வரித்துறை அலுவலர் சவுந்திரராஜன், ஆய்வாளர்கள் கார்த்திக், இதய பென்சிகர், மீனாட்சி மற்றும் காகித ஆலை ஊழியர்கள் பங்கேற்றனர்.