உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் வெங்காயம் அறுவடை பணி

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் வெங்காயம் அறுவடை பணி

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்வெங்காயம் அறுவடை பணிகிருஷ்ணராயபுரம், ஆக. 30-கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பகாப்பட்டி, சிவாயம், வேப்பங்குடி, குழந்தைப்பட்டி, வரகூர், சரவணபுரம், அந்தரப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் சின்னவெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது சின்ன வெங்காயம் விளைந்து விளைச்சல் கண்டுள்ளது. மழை காரணமாக அறுவடை பணியில் தாமதம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக, மழை குறைந்தது வெயில் அடிக்க துவங்கியதால், விவசாய தொழிலாளர்களை கொண்டு சின்னவெங்காயம் அறுவடை பணிகள் துரிதமாக நடந்தது. ஆனால், மழை காரணமாக சின்ன வெங்காயம் விலை சரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ