உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர்;தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் சுந்தர கணேசன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், ஓய்வூதியர்களுக்கு கட்டணம் இல்லாத சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும். அதிக கட்டணம் வசூல் செய்யும், மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசே சந்தா தொகைக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட செயலாளர் கோபால், பொருளாளர் பாலசுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர்கள் காத்த முத்து, பிச்சுமணி, ராமசாமி, மாணிக்கம் உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை