உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா: பக்தர்கள் பரவசம்

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா: பக்தர்கள் பரவசம்

கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை வரை, மஹா சிவராத்திரி விழா நடந்தது. அதில், ஏராளமான பக்-தர்கள் பங்கேற்றனர்.நாடு முழுவதும் நேற்று, சிவாலயங்களில் மஹா சிவராத்திரி விழா நடந்தது. பிரசித்தி பெற்ற கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், மஹா சிவராத்திரி விழா நேற்று மாலை தொடங்கி-யது. பிறகு, இரவு, 9:00 மணி முதல், 10:00 மணி வரை முதல் மற்றும் இரண்டாம் கால பூஜை நடந்தது.அதில், மூலவர் சிலை க்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. நள்ளிரவு, 12:00 முதல், 1:00 மணி வரை நட-ராஜ பெருமானுக்கு, 108 தாமரை பூக்களால் அர்ச்சனை, அதி-காலை, 2:00 முதல், 3:00 மணி வரை மூன்றாம் கால பூஜை, அதி-காலை, 4:00 முதல், 5:00 மணி வரை அர்த்த ஜாம பூஜை, அதி-காலை, 5:30 மணிக்கு பள்ளியறை பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். முன்னதாக, நாட்-டியாஞ்சலி குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்-தது.அதேபோல், கரூர் மாவ ட்டத்தில், வெங்கமேடு, வெள்ளி-யணை, வாங்கல், பசுபதிபாளையம், அரவக்குறிச்சி, க.பரமத்தி, தென்னிலை, வேலாயுதம்பாளையம், புகழூர், சின்னதாராபுரம், குளித்தலை ஆகிய பகுதி-களில் உள்ள, 30க்கும் மேற்பட்ட சிவாலயங்களிலும், மஹா சிவ-ராத்திரி விழா வெகு சிறப்பாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி