அடிப்படை வசதி இல்லாத கணபதி நகர் பொதுமக்கள் கடும் அவதி
கரூர்: கரூர் நகரின் மையப்பகுதியில், மழைக் காலங்களில், மழை நீர் மற்றும் சாக்கடை கழிவு நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சி, சுங்ககேட் அருகே கணபதி நகர், கலைஞர் நகரில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும், அதே பகுதியில் பசுபதிபாளையம் போக்கு வரத்து போலீஸ் ஸ்டேஷனும் செயல்படுகிறது.இந்நிலையில், மழை பெய்யும் போது, அந்த பகுதியில் மழை நீ-ருடன், வீடுகளில் இருந்து கழிவு நீர் தேங்குகிறது. இதனால், அப் பகுதியில் வசிக்கும், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:கணபதி நகர், கலைஞர் நகர் பகுதியில் தார் சாலை இல்லை. மண் சாலையில்தான் வீடுகளுக்கு நடந்து செல்ல வேண்டும். மழைக் காலங்களில் குழந்தைகள், பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. பல ஆண்டுகளாக தார்சாலை போட, கோரிக்கை வைத்தும் பயன் இல்லை. போதிய சாக்கடை கால்வாய் வசதிகள் இல்லாததால், வீடுகளில் இருந்து வெளி-யேறும் கழிவுநீர் தேங்கி நிற்கும். இதனால், கொசு உற்பத்தி அதி-கரித்துள்ளது.தேங்கிய நீரில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் வீடுக-ளுக்குள் வருகிறது. பிரதான சாலையில் இருந்து, கணபதி நக-ருக்கு செல்ல புதிதாக அமைக்கப்பட்ட பிளாட்பாரம் தடையாக உள்ளது. இதனால், அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலங்களில், புகுந்து வீடு களுக்கு செல்கிறோம். இதனால், சுங்ககேட் பிரதான சாலையில் இருந்து, கணபதி நகருக்கு செல்ல சாலை வசதி வேண்டும். மின் கம்பங்களில் விளக்குகள் எரிவது இல்லை.இவ்வாறு தெரிவித்தனர்.