உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மணல் கொள்ளையில் தனியார் நிறுவனம் கலெக்டரிடம் மனு வழங்கிய கிராம மக்கள்

மணல் கொள்ளையில் தனியார் நிறுவனம் கலெக்டரிடம் மனு வழங்கிய கிராம மக்கள்

கரூர்: மணல் கொள்ளையில் ஈடுபட்டு வரும், தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புஞ்சை தோட்டக்குறிச்சி மக்கள், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது: புஞ்சை தோட்டக்குறிச்சி கிராமத்தில், காவிரி ஆற்று படுகையில் உள்ள புறம்போக்கு நிலத்தில், மூன்று தலைமுறையாக விவ-சாயம் செய்து வருகிறோம். நிலத்திற்கு அருகில் தனியார் ரெடிமிக்ஸ் கான்கிரீட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.புறம்போக்கு நிலத்தை, அவர்கள் பயன்படுத்த கேட்ட போது மறுத்து விட்டோம். இதனால் பல்வேறு தொல்லைகளை கொடுத்து வருகின்றனர். இது குறித்து, வேலாயுதம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கான்கிரீட் நிறுவனம் என்ற பெயரில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள வாய்க்கால் பாலத்தின் வழியாக, கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ