மேலும் செய்திகள்
கிராவல் மண் கடத்தல்; டிப்பர் லாரி பறிமுதல்
07-Aug-2024
கிரானைட் கல் கடத்திய டாரஸ் லாரி பறிமுதல்
24-Aug-2024
குளித்தலை: கரூர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் சங்கர், 41, தலைமையில் நேற்று முன்தினம் மாலை 4:00 மணிய-ளவில் வடசேரி பஞ்., பள்ளிப்பட்டி சரக்கு பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். வேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது, உரிய சீட்டு ஏதும் இன்றி சாதாரண கற்கள் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து இரண்டு யூனிட் கற்கள், 6 கன மீட்டர் அளவுள்ள லோடு வாகனத்தை பறிமுதல் செய்து, தோகைமலை போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து வடசேரி பஞ்., காவல்காரன் பெட்டியை சேர்ந்த பிரகாஷ், 25, அதே ஊரைச் சேர்ந்த ரங்கராஜன், 45, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இதேபோல் இரவு, 8:00 மணியளவில் மாய னுார் உப்பிடமங்-கலம் நெடுஞ்சாலை சின்ன சேங்கல் அருகே வாகன சோதனை செய்தனர். அப்போது, வேகமாக வந்த டிராக்டர் டிப்பரை நிறுத்தி சோதனை செய்தபோது, அனுமதி இன்றி ஒரு யூனிட் சாதாரண கற்கள் ஏற்றி வந்தது தெரிய வந்தது. அதிகாரிகள் சோதனை செய்-தபோது, டிரைவர் தப்பினார்.வாகனத்தை பறிமுதல் செய்து, உரிமையாளர் சேங்கல் குடி-காரன் புதுாரை சேர்ந்த மோகன் ஆகிய இருவர் மீது, மாயனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
07-Aug-2024
24-Aug-2024