உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டூவீலர்கள் மோதி விபத்து

டூவீலர்கள் மோதி விபத்து

அரவக்குறிச்சி: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார், கபிலர்மலை அருகே உள்ள வெட்டுவாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி, 47. இவர், நேற்று முன்தினம் இரவு, கரூர் - நாமக்கல் பைபாஸ் சாலையில், டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம், கரூர் - நாமக்கல் சாலையில், வேலாயுதம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில், கரூர், ஜேஜே சாலை, நிர்மல் நிவாஸ் அபார்ட்மெண்ட் பகுதியை சேர்ந்த ராமசாமி, 72, என்பவர் வேகமாக ஓட்டிவந்த டூவீலர், நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில், ரவி பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !