உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேதமான குழாயால் வீணாகும் குடிநீர்

சேதமான குழாயால் வீணாகும் குடிநீர்

கரூர்: கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், மாநகராட்சிக்கு சொந்தமான மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இதன் மூலம், கரூர் மாநகராட்சியில் பல பகுதிகளுக்கு குடிநீர் லாரி மற்றும் பூமிக்கடியில் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.மேலும், கரூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் சப்ளை செய்யப்படாத நாட்களில், பொதுமக்கள் குடங்கள், டின்கள் மூலம் குடிநீர் பிடித்து செல்ல வசதியாக, குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களில், தண்ணீர் பிடித்து செல்லவும், தனியாக பிளாஸ்டிக் குழாய் போடப்பட்டுள்ளது.இந்நிலையில், குழாய் சேதமடைந்துள்ளதால், 24 மணி நேரமும் குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. வாகனங்களுக்காக போடப்பட்ட பிளாஸ்டிக் குழாயிலும், குடிநீர் வீணாக செல்கிறது. கரூர் மாநகராட்சி பகுதியில், ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. மேல்நிலை தொட்டி வளாகத்தில் சேதமடைந்த குழாயை மாற்ற, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை